Wednesday 9 December 2009

காதலில் தொலைந்தேன்......

அந்திப் பொழுது
அழகன பூஞ்சோலையில்...
ரோஜா குளியலில்
நான் திழைத்திருக்க
மல்லிகைக் குவியலாய்
என் மனங்கவர
அவள் வந்தாள்....

என் முன்னால்
முட்செடியில் ரோஜாக்கள்...
முழு நிலவாய் அவள் முகம்...
மூன்றாம் பிறை நிலவு...
நான் முனிவனா என்ன
முகங்குனிந்து செல்ல...!

சனங்கள் நெரிசலிலும்
அவள் நடையை
அழகாய் ரசித்திருக்க......
யாரோ ஒருவன்
அடித்துவிட்டான் என் மணிபேசை...

அதைத் தேடவா..?
அவளைத் தொடர்வதா...?
மனதில் உடன் பதில்
உடனே தொடர் என்று....
காரணம்..கணப்பொழுதில்
உன் கண்களினால்
உன் மனதைச் சென்றடைந்தவள்...
அவளுக்காய் உனை மறந்து
உன் உடமையைத் தொலைத்தவன்...
எனவே அவள் தான் முக்கியம்...
மனதின் பதில் கிடைத்ததும்
அவள் பார்வையைத் தேடினேன்...
ஆனாலும் என் மணிபேசை அடித்த
பாவியையும் தேடினேன்...
சரி போகட்டும்...
ஐந்து பவுண்சில்
அவன் ஆயுள் முழுவதுமா வாழ்வன்..?
அரை வயிறு மைக்டொனால்சில்
அன்றிரவை முடிப்பான்....
அவளுக்காய் என் கணம் மறந்ததை
சிம்போலிக்காய் காட்டிய
தெய்வம அவன்....
சரி அவனை விட்டுவிட்டேன்...

அவள் மேல் காதல்
அவரை விதைபோல
அவசர அவசரமாய் என் மனதில்
செடியாய் முளைத்துவிட
பல முயற்சியின் பின்
அவள் பார்வையில்
பதிந்து கொண்டேன்...
பக்குவமாய் சேர்ந்தும் கொண்டேன்.....
துளித்துளியாய் அவள்
காதலைச் சேகரித்தேன்...
ஒரு துளியேனும் அழிந்துவிடாமல்
என் உயிரால் சிறையமைத்டேன்...

எனக்கு மனதிலே சுகம் தந்தாள்....
என் மணிகள் பல தொலைத்தாள்....
மந்திகைப் பைத்தியமாய்
என் நினைவையே மறக்கவைத்தாள்....
நில் என்றால் நிற்பேன்...
அவள் நினைத்ததை முடிப்பேன்...
ஆனாலும் அவள் நினைவில்
எனைத்தூக்க நினைத்துவிட்டாள்....

காரணம் சொல்லவில்லை...
என் மேல் காதலும் அவளுக்கில்லை; என்று
கண்டபடி பொய் சொல்லி...
என்னை புதைகுளியில் தள்ளிவிட்டாள்....
அந்தப் பூவிலே புதைந்த
என் காதல் புனிதத்தைத் தேடுகிறேன்...
என்னால் பொறுக்க முடியவில்லை
அவள் எனைப் பிரிந்த
காதலால் வாடுகிறேன்....

நான் முட்செடியில் பறித்த
ரோஜாவாய் அவளிருந்தாள்...
இன்று முட்களை விட்டுவிட்டு
முழுப் பூவாய் அவள் மறைந்தாள்...
என் மன வலியைக் காட்ட
என்னால் முடியவில்லை...
மறைந்துவிட்ட உன்னால்
பல நாளாய்த் தூக்கமில்லை....
நீ விட்டுச் சென்ற முட்களால்
என் உடலிலே வலி பதிப்பேன்...
என் உயிரின் சுவாசத்துக்காய்
பல ஆண்டு தவங்கிடப்பேன்....

என் உடல் வலியைப் பாரடி...
நீ என்னைச் சேரடி....
என் ஆசைத்தோட்டத்தில்
ரோஜாவாய் மலரடி....

இளங்கவி.....

No comments:

Post a Comment